திறந்திருக்கும் நேரம்
- 8.30 - 13.00
- 18.00 - 21.00
- 8.00 - 21.00
நித்திய பூஜைகள்
- காலை 8.30
- மாலை 7.30
- 8.00 / 12.00 / 19.30
பதிகங்கள்
-
கந்தஷஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசம் வரிகள் (Kandha sashti kavasam) இந்த பதிவில் கொடுக்க...
-
திருவெம்பாவை
(திருவண்ணாமலையில் அருளியது)
திர...
-
பஞ்சபுராணம்
சிவாலயங்களில் பூசைகளின் போது
பஞ்சபுராணம்
சிவாலயங்களில் பூசைகளின் போது பஞ்சபுராணம் ஒதுதல் நடைபெறுகிறது. இதற்காக தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம்(பெரியபுராணம்) ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
பஞ்சபுராணம் பாட துவங்கும் போது 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லி துவங்கி, பின்னா் மேற்கூறிய 5 பகுதிகளிலிருந்து ஒருபாடல் வீதம் பாடி, தொடா்ந்து அருணகிாிநாதா் பாடிய திருப்புகழ் பாடலுடன் இறுதியில் "வான்முகிழ் வழாது பெய்க" என்ற கந்த புராண வாழ்த்துப்பாடல் பாடி நிறைவு செய்வது வழக்கம்.
தேவாரம்
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
திருவாசகம்
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
திருவிசைப்பா
நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி
திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.
கந்தபுராணம்
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்
திருச்சிற்றம்பலம்
மாத நிகழ்வுகள்
-
Oct022024
அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம...
-
Oct062024
17:30 : நாராயண பஜனை
-
Oct082024
முருகனுக்கான விரதம்
கந்தனை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்று <...
-
Oct132024
விஷ்ணுபகவானுக்குரிய விரதம்
-
Oct152024
சிவனுக்குரிய விஷேட விரதம்
16:00 மணிக்கு அபிஷேகம்
-
Oct172024
19:00 :- விஷேட பூஜை
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ள...
-
Oct192024
17:00 - 21:00 : அபிஷேகம், உள்வீதி வலம் வருதல்
-
Oct202024
விநாயகரை நோக்கிய விஷேட வழிபாடு
-
Oct262024
மாலை : அபிஷேகம், பஜனை, படிப்பூஜை