முகப்பு

சுலோகம்

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி .

ஸ்ரீ சிவசுப்பிரமணியர் / முருகன்

முருகன் சிவபெருமானின் இரண்டாவது மகன். அவர் மனித முழுமையை காட்டும் தோற்றத்தில் இருக்கின்றார். “முருகன்” என்பதன் பொருள் அழகு மற்றும் இளமையானவர் என்று பொருள்படுவதுடன் அவரும் இந்த அம்சங்களை கொண்டு அமைந்திருக்கிறார்.

அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்

கலியுக வரதனாகிய சிவசுப்பிரமணியர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இடங்களில் சுவிற்சர்லாந்திலுள்ள சூரிச் மாநகரமும் ஒன்றாகும். குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் மலைப்பாங்கான இடத்தில் வற்றாது பெருகிக் கொண்டிருக்கின்ற அருவிக் கரையில் எழில் பொங்க வீற்றிருக்கின்ற காட்சிதான் என்னே! இவ்வாலயம் 1994 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 14 ஆம் திகதி அமைக்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது.